1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gundas cancel against savukku sankar

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்த்து சவுக்கு சங்கர் தாயார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை அடுத்து, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கு, கஞ்சா வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு ஆகியவற்றின் பின்னர், சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்றிரவு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!