செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (17:37 IST)

புல்லட் நாகராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காவல் துறை அதிகாரிகளை அலைபேசியில் மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ரௌடி புல்லட் நாகராஜ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தேனி மாவட்டம் பெரியமங்கலத்தை சேர்ந்த பிரபல ரௌடி புல்லட் நாகராஜின் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அடிக்கடி ஜெயிலுக்கு செல்வதும் பிறகு ஜாமீனில் வெளிவருவதுமே வாடிக்கையாகக் கொண்டவர். மதுரைச் சிறைத்துறை அதிகாரி ஊர்மிளாவை கொலை செய்துவிடுவேன் என அவர் மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது.

ஆனாலும் அடங்காத நாகராஜ் தென்கலை இன்ஸ்பெக்டர் மற்றும் தேனி கலெக்டரையும் மிரட்டும் ஆடியோவையும் வெளியில் கசிய விட்டார். எனவே இவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

தைரியமாக ஊருக்குள் பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை போலிஸார் சினிமாப் பாணியில் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். முதலில் திருச்சி சிறையில் இருந்த அவரை அதன் பிறகு வேலூர் சிறைக்கு மாற்றினர்.

இந்நிலையில் ரௌடி நாகராஜ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய தேனி எஸ்பி பாஸ்கரன் பரிந்துறை செய்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அதற்கு உத்தரவிட்டார். எனவே இப்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.