புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:39 IST)

நானும் ரவுடிதான்... போலீசாரை மிரட்டிய புல்லட் நாகராஜ் கைது....

காவல் உயர் அதிகாரிகளை செல்போனில் மிரட்டி வாட்ஸ்-அப்பிப் வீடியோ வெளியிட்டு வந்த புல்லட் நாகராஜ் பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேனியை சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜ் மதுரை மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளா, தென்கரை ஆய்வாளர் மதனகலாவை செல்போனில் மிரட்டல் விடுத்து அவர் அந்த ஆடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டு வந்தார்.
 
அந்த ஆடியோவில் தன்னுடைய சிறையில் இருக்கும் சகோதரர் மற்றும் அவரின் ஆட்களுக்கு போலீசார் எந்த சிறை அதிகாரிகளும் தொல்லை கொடுக்கக் கூடாது என எச்சரித்ததோடு, என்னை முடிந்தால் கைது செய்யுங்கள். அப்படி செய்தால் அந்த இடத்திலேயே இறந்து விடுகிறேன் என மிகவும் தெனாவட்டாக பேசியிருந்தார். இதையடுத்து, எஸ்.பி. ஊர்மிளா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் புல்லட் நாகராஜை தேடி வந்தனர்.
 
அதேபோல், நேற்று ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், என் வீட்டில் என் அப்பா, அம்மா அவர்களை போலீசார் நிறுத்திக்கொள்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் போலீசார் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். என்னை உங்களால் பிடிக்க முடியாது. நான் நினைத்தால் மட்டுமே உங்களின் முன் வருவேன் என மீண்டும் தெனாவட்டாக பேசியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று பெரிய குளத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்கரையில் இருசக்கர வாகனத்தில் புல்லட் நாகராஜ் சென்ற போது பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் அவரை விரட்டி சென்று பிடித்துள்ளார். 
 
செல்போனில் தம்மட்டம் அடித்துக்கொண்டது போல் அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை. சின்ன சின்ன தவறுகளை மட்டுமே செய்து விட்டு சிறைக்கு சென்றுவிட்டு, தன்னை பெரிய ரவுடி போல் அவர் பில்டப் கொடுத்து வந்தார் என அப்பகுதி மக்கள் அவரை பற்றி சிரித்துக்கொண்டே கூறியுள்ளனர்.