ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (13:46 IST)

டெல்லி எஜமானர்களின் பாதம் பணிந்து...துரோகம் இழைத்திருக்கும் அதிமுக அரசு - ஸ்டாலின் குற்றச்சாட்டு!

ஈழத்தமிழர் நலன் காக்கவும் -இஸ்லாமிய சமுதாயத்தியனரின் உரிமை காக்கவும் மத ரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பாகக அரசின் #CAA2019-ஐ எதிர்த்து நாளை நடைபெறும் போராட்டத்தில், நாடு காத்திடத் திரளுவோம்! இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
 
'திமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் மத்திய அரசு -மாநில் அரசுகள் கொண்டு வருகின்ற திட்டத்தை எல்லாம் எதிர்க்கிறது என விமர்கிக்கின்ற ஆளும் கட்சியினர் நாம் முன் வைக்கின்ற கேள்விகளுக்கு ஒருபோதும் பதலளிப்பதில்லை.ஆனால் மக்களிடம் நமது போராட்டத்திற்கான தேவையை நியாயத்தை எடுத்து வைத்து அவர்களின் ஆதரவையும் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமை இருக்கிறது.
 
நாட்டின் வளர்ச்சியை அதலபாதாளத்துக்கு தள்ளுகின்ற கடுமையான பொருளாதார பின்னடைவு, வேலையின்னை அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு போன்ற பல்வேறு அடிப்படையான  பிரச்சனைகளால் மக்களிடையே வரும்  ஏமாற்றத்தையும் கோபத்தையும் திட்டமிட்டு திசை திருப்புவதற்காகவே ஓரவஞ்சனையுடன் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
மாநிலங்களையில் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 125, எதிர்வாக்குகள் 105, அதிமுகவின் 11 வாக்குகளும், எதிர்த்துப் போடப்பட்டிருந்தால், எதிர்ப்பு வாக்குகள் 116 என்ற எண்ணிக்கை அடைந்திருக்கும், ஆதரவு வாக்குகள் 114 என்ற நிலைக்கு இறங்கி இருக்கும்.

அதன் மூலம் மசோதாவும் தோற்கடிக்கப்பட்டிருக்கும். தங்கள் கையில் இருந்த துருப்புச் சீட்டின் தன்மை அறியாத அடிமை அதிமுக, ஆதரவு வாக்களித்து சிறுபான்மையினருக்கும், ஈழத் தமிழருக்கு, மாபெரும் துரோகம் இழைத்திருப்பதை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது .'என தெரிவித்துள்ளார்.