திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஜனவரி 2022 (18:28 IST)

கொரோனா பரவல் எதிரொலி: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!

கொரோனா பரவல் எதிரொலி: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!
கொரனோ வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனவரி 17ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் கிண்டி சிறுவர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 75 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது என்பது தெரிந்ததே
 
அதேபோல் மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரே ஆதரவாக இருந்த கிண்டி சிறுவர் பூங்காவும் மூடப்படும் அறிவிப்பு பெரும் அதிருப்தியை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது