வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:51 IST)

வண்டலூர் உயிரியல் பூங்கா… 7 நெருப்புக் கோழிகள் மரணம்!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் வளர்க்கப்பட்டு வந்த 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சென்னை உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்ட 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

இதனால் அவை பறவைக் காய்ச்சலால் இறந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது சம்மந்தமாக இறந்த நெருப்புக் கோழிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.