1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (15:49 IST)

அமேசான் கிண்டிலில் அதிகமாக விற்பனையாகும் பெரியார் புத்தகங்கள்!

அமேசான் கிண்டிலில் அதிகமாக விற்பனையாகும் பெரியார் புத்தகங்கள்!
ஆன்லைன் புத்தக விற்பனை நிலையங்களில் ஒன்றான அமேசான் கிண்டில் தளத்தில் பெரியாரின் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
திராவிட கட்சிகளுக்கு குருவாக இருப்பவர் பெரியார் என்பதும் பெரியாரின் கருத்துக்களை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
பெரியாரின் சிந்தனைகள் குறித்த புத்தகங்கள் கடந்த பல வருடங்களாக விற்பனையாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அமேசான் கிண்டில் தளத்தில் பெரியார் எழுதிய மற்றும் பெரியார் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இன்றைய இளம் தலைமுறையினர் அதிக அளவில் தமிழ் மற்றும் பெரியாரிய நூல்களை வாங்குவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மேலும் சில பெரியாரின் புத்தகங்கள் அமேசான் கிண்டில் தளத்தில் வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது