வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (12:24 IST)

பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன?

ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை. 

 
பள்ளி, கல்லூரிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு... 
1. கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும். 
2. மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 
3. மாணவர்கள் முகக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும்.
4.  கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.
5. விடுதிகளில் சாப்பிடும் போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். 
6. வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது.
7. சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். 
8. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடந்து பரிசோதிக்கப்பட வேண்டும்.