புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (11:30 IST)

300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ? – சிக்கியது வேல்ஸ் நிறுவனம் !

வேல்ஸ் நிறுவனங்களில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவரான ஐசரி கணேஷுக்கு சொந்தமான  வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக  வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் 27 இடங்கள், தெலுங்கானாவில் 3 இடங்கள் என மொத்தம் வேல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது

கல்வி நிறுவனங்கள் தவிர சினிமா தயாரிப்பு தொழில்களிலும் ஐசரி கணேஷ் சமீபகாலமாக இறங்கியுள்ளார். சமீபத்தில் இவர்களின் நிறுவனம் தயாரித்த அரசியல் நக்கல் படமான எல்.கே.ஜி. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது 3 நாடகளாக நடந்து முடிந்த சோதனையில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை  வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.