1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (12:23 IST)

ஓ மை காட்..! ரூ. 433 கோடி வரி ஏய்ப்பு? லிஸ்டில் சிக்கியது "தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்"!

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பிரபலமான நிறுவனங்கள் சில ரூ. 433 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. 


 
ஜிஎஸ் ஸ்கொயர், தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ரேவதி குழுமம் உள்ளிட்ட பிரபலமான 74 நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில நாட்களாக வருமான வரி சோதனை நடத்தி வந்தனர். சோதனையின் முடிவில் லிஸ்டில் சிக்கியுள்ள இந்த நிறுவனங்கள் ரூ.433 கோடி அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 
 
மேலும் இன்னும் கணக்கில் வராத ரூ. 25 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம், 626 கேரட் வைரம் உள்ளிட்டவை வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளனது.