சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலையா? அதிர்ச்சி தகவல்கள்

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலையா?
Last Updated: வியாழன், 4 ஜூன் 2020 (08:25 IST)
சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலையா?
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன,.
இந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொரோனாவால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

கொரோனா பாதிப்பு அடைந்த அந்த 70 வயது மூதாட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவர் திடீரென மாயமானதால் போலீசார் அவரை தீவிரமாக தேடியதாகவும் இந்த நிலையில் மூதாட்டி கழிவறையில் மர்மமான முறையில் பிணமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த மூதாட்டியின் மரணம் தற்கொலையா? அல்லது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை செய்து செய்யப்பட்டு வருவதாகவும் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிவந்தால் மட்டுமே இது குறித்து உண்மை தெரியவரும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :