தொடர்புடைய செய்திகள்
- சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை !
- இப்படியெல்லாமா நிகழ்ச்சி ஒளிபரப்புவது? தனியார் டிவிக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி
- காட்மேன் வெப்சீரீஸ் தடை: ஆட்களை சேர்க்கும் தயாரிப்பு குழு!
- காட்மேன் சீரியல் ஒளிபரப்பாகாது, ஒற்றுமையே உயர்வு: பிரபல நடிகர் டுவீட்
- சென்னையில் ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு - காவல் ஆணையர்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட வலைதளம் – ஆன்லைனில் வேலை செய்பவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு!
இந்தியாவில் வி டிரான்ஸ்பர் எனப்படும் டேட்டா பகிர்வு வலைதளத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனலைனில் வேலை செய்பவர்கள் அனுப்ப வேண்டிய பைல்களை வி ட்ரான்ஸ்பர் மூலமாக அனுப்பி வந்தனர். அந்த வலைதளம் மூலமாக 2 ஜி பி வரை இலவசமாக பைல்களை அனுப்ப முடியும். மேலும் பணம் கட்டி சந்தாதாரர்களாக மாறுபவர்களுக்கு 20 ஜி பி வரை பைல்களை அனுப்பும் வசதி அளிக்கப்படும்.
இந்நிலையில் இந்த வலைதளத்தை இப்போது இந்தியாவில் தடை செய்துள்ளனர். இது பலருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘ஏன் வி ட்ரான்ஸ்பரை தடை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் தங்கள் தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து வந்தனர். இது நம்மில் பலருக்கு ஒத்துழைக்க உதவும் ஒரு கருவியாக இருந்து வந்தது’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
