1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:01 IST)

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு! அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கிய நிலையில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க மாணவர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.

இந்த ஆண்டில் தமிழக மருத்துவ கல்லூரிகளில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்குமான கலந்தாய்வு நேற்று முதலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இடஒதுக்கீட்டின்படி 436 எம்.பி.பி.எஸ், 97 பிடிஎஸ் என 133 இடங்கள் அரசு பள்ளி மாணவர்கள் மூலமாக நிரப்பப்படும்.