நேதாஜி இல்லையெனில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் மகாத்மா காந்தி என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் காந்தியை விட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் சுதந்திரம் கிடைக்க காரணமானவர் என தமிழக கவர்னர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழாவில் கவர்னர் ஆர் என் ரவி பேசினார். அப்போது நேதாஜி இல்லை என்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்திருக்காது.
மகாத்மா காந்தி நடத்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் வரலாற்றை பாருங்கள். 1942 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த போராட்டத்தை நடத்தவில்லை. நேதாஜி கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால் உண்மை என்னவென்றால் குறிப்பிட்டத்தக்க அளவுக்கு நேதாஜி போற்றப்படவில்லை என்று கூறினார்.
சுதந்திர போராட்டத்தில் காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை என்றும் நாடு சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம் என்றும் நேதாஜி தியாகமும் போற்றப்பட வேண்டும் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
Edited by Mahendran