1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (13:09 IST)

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம்: முதல்வருக்கு அழைப்பு விடுத்த கவர்னர் ரவி..!

நிலுவையில் இருக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஆலோசனை செய்ய முதல்வருக்கு கவர்னர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு  அனுமதி வழங்காமல் கவர்னர் இழுத்தடித்து வருகிறார் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கவர்னருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. \
 
இந்த நிலையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தாலும் புயல் நிவாரண பணிகள் முடிந்ததும் வருவதாக முதலமைச்சர் தரப்பில் பதில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva