வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (14:19 IST)

கலாநிதிமாறன் ரூ.5 கோடி நிவாரண நிதி

kalanithi maran - M.K.Stalin
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், அரசியல்கட்சிகளும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு  சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர் ரூ. 1 கோடிக்கான காசோலையும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையும், லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் பி. அபிநயா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ  5  கோடிக்கு  காசோலையை சன் குழும தலைவர் கலாநிதிமாறன்  இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.