ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (10:19 IST)

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்கள் வரவழைப்பு..!

bomb
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும்  மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர், கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னர் அபாயம் விளைவிக்கும் விதமாக எந்த விதமான பொருளும் கர்நாடக ஆளுநர் மாளிகையில் கைப்பற்றப்படவில்லை. இதனையடுத்து போலி மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
 
 இந்த நிலையில் கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்தது யார்? எங்கிருந்து மிரட்டல் விடப்பட்டது? என்பது குறித்து கர்நாடக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran