வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (07:38 IST)

ஆளுநர் மாளிகை தர்பார் மண்டபத்திற்கு பாரதியார் பெயர்.. ஜனாதிபதி, முதல்வர் முன்னிலையில் நிகழ்ச்சி..!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு மகாகவி பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 
இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர் என் ரவிம், முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  ராஜ்யசபா எம்பி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் என்ற பெயரை மாற்ற வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்திற்கு பல பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மகாகவி பாரதியார் என்ற மண்டபம் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.  
 
தமிழுக்காக பெரும் தொண்டு செய்த பாரதியாரின் பெயர் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு வைக்கப்பட்டுள்ளதை அடுத்து பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva