வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (13:56 IST)

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜி விவகாரமா?

தமிழக ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னால் டெல்லி சென்ற நிலையில் தற்போது அவர் டெல்லியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து  நீக்கி கவர்னர் ரவி உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் திடீரென அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். 
 
இந்த நிலையில் தற்போது அவர் டெல்லியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி அவர்களை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் செந்தில் பாலாஜியை அமைச்சரவிலிருந்து நீக்கியது குறித்து ஆலோசனை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran