வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (09:58 IST)

திமுக வெற்றியை கொண்டாடிய சீன தமிழர்கள்!

திமுக வெற்றியை கொண்டாடிய சீன தமிழர்கள்!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதன்முதலாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுகவின் வெற்றியை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே கொண்டாடி வருகிறது. இந்தியாவில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் திமுகவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுகவின் தேர்தல் வெற்றியை சீனாவில் வாழும் தமிழர்களும் கொண்டாடியுள்ளனர். இதற்காகவே பிரத்தியேகமாக ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தி திமுகவின் வெற்றியை அவர்கள் கொண்டாடியுள்ளனர் 
 
சீனாவில் உள்ள முக்கிய நகரம் ஒன்றில் வாழும் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிலிம் என்பவரின் ஏற்பாட்டின் பேரில் இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை பரிசு அளிக்கப்பட்டது
 
சீனாவில்ல் கிரிக்கெட் விளையாட்டை இல்லை என்ற நிலையில் திமுகவின் வெற்றியை சீன தமிழர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தி கொண்டாடியுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது