வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (08:53 IST)

வம்படியாக வாயை விட்டு மாட்டிக் கொண்ட எடப்பாடியார் - போராட்டத்தில் குதித்த ஜாட்கோ ஜியோ அமைப்பினர்

சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களை விமர்சித்து பேசியதற்காக ஜாட்கோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதலில் நேற்று காலை கோவில் கும்பாபிஷேகம் ஒன்றில் பங்கேற்றார். பின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் எந்த ஒரு விரிசலும் இல்லை என்றார்.
 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த மாபெரும் இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது என்றார்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய அவர் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் விமர்சித்துப் பேசியதாக தெரிகிறது. இதனால் கொந்தளித்த ஜாட்கோ - ஜியோ அமைப்பினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே நின்று போராட்டம் நடத்தினர்.
ஒரு மாநில முதல்வரே அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசலாமா என கோஷமிட்டப்டி போராட்டம் நடத்தினர்.