போதை கலாச்சாரத்தை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்i- விஜயகாந்த்
விழுப்புரத்தில் கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜாவின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தில் இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், விழுப்புரத்தில் வியாபாரி ஒருவரை கஞ்சா போதையில் திமுகவினர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜாவின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். ரம்ஜான் நோன்பு பொருட்களை வாங்க சென்றபோது இப்ராஹிம் கொலை செய்யப்பட்டிருப்பது இஸ்லாமியர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.