வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 30 மார்ச் 2023 (19:03 IST)

கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்கள் - அண்ணாமலை டூவீட்

விழுப்புரம் மாவட்டத்தில்  நடத்தில் இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின், பழக்கடை நடஹ்தி வரும் ஞாசேகருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகார், வல்லரசு என்ற இரு மகன்கள் உள்ளனர். ஞானசேகருக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டதியால், வீட்டிற்குப் பணம் கொடுப்பதில்லை என்று சாந்தி தன் மகன்களிடம் கூறியுள்ளார்.

இதுபற்றி தங்கள் தந்தையிடம் கேட்க வல்லரசு மற்றும் ராஜசேகர் சென்றுள்ளனர். அப்போது பழக்கடையில், அவர் இல்லாததால், இப்பிரச்சனையில் இப்ராஹிம் தலையிட்டுள்ளார். அவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், காயமடைந்த இப்ராஹிம் உயிரிழந்தார். இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மறும் வல்லரசை போலீஸர் கைது செய்துள்ளனர் என்று கூறினார்.

இந்த  நிலையில், பாஜக தலைவர் அண்னாமலை தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’விழுப்புரத்தில் தமிழக முதல்வர் திரு  முக.ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது.

பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும் கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க  தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் ‘’என்று தெரிவித்துள்ளார்.