வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (08:46 IST)

அதிகாரம் கிடைக்கும் வரை கூட்டணிதான் பாதுகாப்பு! - திருமாவளவன்!

Thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கூட்டணியில் பயணிப்பதற்கான காரணம் குறித்து தனது கட்சியினரிடையே பேசியுள்ளார்.

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலம் தழுவிய மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்தது முதலே விசிக - திமுக கூட்டணி குறித்த பல யூகங்கள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் திருமாவளவன் கூறிய நிலையில், திமுகவும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

 

அதேசமயம் கூட்டணியாக இயங்குவது, தனித்து இயங்குவது குறித்து விசிக கட்சிக்குள்ளேயே பல மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அசோக் நகரில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
 

 

அப்போது பேசிய அவர் “ஆதவ் அர்ஜுனாவும், கட்சி பொதுச்செயலாளர்களும் இருவருமே கட்சியின் நலன் சார்ந்துதான் சிந்தித்தார்கள். எதிர்காலமும், அதிகாரமும் நம்மை நோக்கி வரும். அப்படி வரும் வரை கூட்டணியில் பயணிப்பதே கட்சிக்கு பாதுகாப்பு. Safer Zone இல்லாமல் விளையாடவே கூடாது. நாம் யுத்தத்தில் இருக்கிறோம். எலிக்கூட தப்பிக்க தன் வலையில் தனி ஒரு பாதை வைத்திருக்கும். எலிக்கு இருக்கும் அறிவு நமக்கு வேண்டும். 

 

மக்களோடு நிற்பவர்களை யாரும் நசுக்கிவிடவோ, ஒழித்துவிடவோ முடியாது என்பதற்கு இலங்கை தேர்தல் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K