புகழ்பெற்ற பூலாம் வலசு சேவல் சண்டை போட்டிக்கு தயார்
தமிழக அளவில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற பூலாம் வலசு சேவல் சண்டை போட்டிக்கு தயார் வரும் 13 ம் தேதி தொடங்கி வரும் 15 ம் தேதி வரை நடக்கின்றது மாவட்ட ஆட்சியரின் உத்திரவிற்கிணங்க தயராகி வரும் ஆடுகளம்.
கரூர் மாவட்டம், பூலம் வலசு சேவல் சண்டை என்பது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலில் கட்டப்பட்ட கத்தி குத்தி ஜாக்கி மற்றும் பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் இந்த போட்டிக்கு 2015 முதல் 2018 வரை தடை விதித்தது. அதே போல, கடந்த 2019 ம் வருடம் பொங்கல் முடிந்த பிறகு சமூக நல ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து அதற்கான தடை சான்றினை ரத்து செய்தனர். இந்நிலையில் பிப்ரவரி மாதம் களையிழந்த நிலையில் சேவல் கட்டு அந்த 2019 ம் ஆண்டு நடந்தது. இதன் பிறகு 2020 ம் ஆண்டு கடந்த பொங்கல் அன்று மீண்டும் உயிர்பெற்றது போல், சேவல் சண்டை எனப்படும் சேவல் கட்டு நடைபெற்றது. அதன் பிறகு இந்த முறை கொரோனா தாக்குதல் விழிப்புணர்வு கடைபிடித்தவாறு எப்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகின்றதோ, அதே போல, சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டைகள் வரும் 13 ம் தேதி நடைபெற கரூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற தமிழர்களின் வீர விளையாட்டிற்குள் ஒன்றான இந்த சேவல் சண்டைக்கான ஆடுகளம் இடம் தற்போது முழு வீச்சில் நடைபெறும் நிலையில், பூலாம் வலசு ஊரில் உள்ள அந்த குளத்தில் சீரமைக்கும் பணியும் நடைபெறுகின்றது. ஆகவே இம்முறை மழை பெய்யாமல் இருக்க வேண்டுமென்கின்றனர் இந்த சேவல் சண்டை நடத்தும் விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள், அதே போல, அனைவரும் முகக்கவசம் அணிந்து வாருங்கள் என்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதோடு, விழாவில் பங்கேற்கும் கோழிகளும், சேவல் சண்டையில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு பின்னர் பரிசோதித்து தான் அவர்கள் உள்ளே அனுப்ப படுவதாக விழாக்கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதே போல, ஊர் மக்கள் சார்பில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வரும் 13 ம் தேதி இந்த விளையாட்டு துவக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது