1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 நவம்பர் 2020 (14:01 IST)

ஈஷா மகாசிவராத்திரியை தடை செய்ய முடியாது; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கோயம்புத்தூர் ஈஷா மகாசிவராத்திரியால் சுற்றுசூழல் மாசுபடுவதால் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த விழாவில் வந்து கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த விழாவிற்காக ஏராளமான மக்கள் குவிவதால் ஒலி, ஒளி மாசு ஏற்படுவதாக பூவுலகின் நண்பர்கள் குழு சார்பில் இந்த விழாவை தடை செய்து உத்தரவிட வேண்டும் என பசுமை தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 2 வருடமாக நடந்து வந்த இந்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், மகாசிவராத்திரி விழாவிற்கு தடை விதிக்க முடியாது என கோரிக்கையை நிராகரித்துள்ளது. வழக்கம்போல சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெற்று சிவராத்திரி விழாவை நடத்தலாம் என்றும், ஒலி, ஒளி மாசு ஏற்படாத வண்ணம் விழாவை கொண்டாடவும், அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.