வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 டிசம்பர் 2018 (13:59 IST)

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி – வெளியானது அரசாணை...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகல் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

அதனையடுத்து மக்கள் மெரினாவில் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தால் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதிய சட்டம் ஒன்றை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்தது. அதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த தேதி வாரியாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்  3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், 16-ம் தேதி- பாலமேட்டிலும் 17-ம் தேதி- அலங்காநல்லூரில்ம் நடத்த அனுமதி அளித்துள்ளது.