1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 மே 2024 (09:18 IST)

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

assembly
ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை எனவும், நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
 
ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்கள் பணியை எளிதாக்க தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. ஒவ்வொரு தாலுகாவுக்கும், ஒரு சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு, உரிய நேரத்தில் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை  சிறப்பு அதிகாரிகள் உறுதி செய்வார்கள். 
 
முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக்கும் வகையில், வெளி தாலுகாவை சேர்ந்த அதிகாரிகளை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தாலுகாவுக்கும் உரிய அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.
 
Edited by Mahendran