வாய்க்குள் வைத்து தங்கம் கடத்தல்...2 பேர் கைது
வாய்க்குள் வைத்து தங்கம் கடத்திய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்தானர். அவர்கள் கொண்டு வந்த பைகளிலும், உடைகளிலும் எதுவும் சிக்கவில்லை.
இதையத்டுது, கருவியை வைத்துப் பரிசோதனை செய்த போது, இரு நபர்களின் வாய்க்குள் சுமார் 951 கிராம் மதிப்புள்ள தங்கம் மற்றும் தங்க செயின் மறைந்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ1கோடி யாகும். இதனையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.