1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாய் துர்நாற்றத்தை போக்கும் இயற்கை வழிமுறைகள் என்ன....?

வாய் கொப்பளிக்கும் நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக் கொள்ளலாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
குடல்சார்ந்த பிரச்னைகளால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் சரிசெய்ய காலையில் எழுந்தவுடன் டீ, காப்பிக்கு பதில்  4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கலாம். பற்களை நன்றாக துலக்கவிட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே பல் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்தால் துர்நாற்றம் ஏற்படாது.
 
அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை உண்பதை குறைத்தால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய் கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்டப் பின் சரியாக வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குகளானது பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர வழி வகுக்கும். மேலும் இரவு படுக்க போகும் முன் ஒருதடவை பல்துலக்கலாம். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும். கிருமிகளால் தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.
 
ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்தினால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படும். இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்து வந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம்.