1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாய் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் !!

வெண்டைக்காய்களில் உள்ள நார்ப் பொருள்கள் கொலஸ்ட்ராலை கரைப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றி விடுவதால் வாய் நாற்றம் நிரந்தரமாகவே அகன்று  விடும்.
 

அவரைக் காயில் லெசித்தின் என்னும் நார்ப் பொருள் உள்ளது. இது குடலில் மலம் தங்கõமல் பார்த்துக் கொள்வதால் நாம் பேசும்போதும், மூச்சு விடும்போதும் நாற்றம் எடுக்காது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை உற்பத்தி செய்து கொடுப்பதுடன் வாய் நாறாமலும் பார்த்துக் கொள்கிறது அவரைக்காய்.
 
குடல் பகுதிகள் நன்கு செயல்பட்டுக் கொண்டே இருந்தால் வாய் நாறாது. காய்ச்சலும் வராது. இதற்கு விற்றமின் ‘சி’ அதிக அளவில் உள்ள கொத்தமல்லிக்கீரை  உதவும். இந்தக் கீரையில் 15 கிராம் கீரையை மென்று திண்ணலாம். இல்லாவிட்டால் காலையிலோ அல்லது மதிய உணவிலோ கொத்தமல்லிக் கீரைத் துவையல் இடம்பெறுவது நல்லது. இதனால் வாய் நாற்றம் தடுக்கப்படும்.
 
25 கிராம் அளவு கொத்தமல்லிக் கீரையை நன்கு கழுவி சாறாக்கி அதை அருந்தினால் காய்ச்சல் நேரத்தில் உடல் குளிர்ச்சியைப் பெறும். வாய் நாற்றமும் அகலும். கொத்தமல்லிக் காப்பி அருந்தினாலும் வாய் நாற்றம் அகன்று விடும்.
 
ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ப் பொருள் குடலில் தங்கியுள்ள கெட்டுப் போன, கெடுதியான பொருட்களை உடனே வெளியேற்றுவதால் வாய் நாற்றமும் தடுக்கப்படுகின்றது. 
 
எலுமிச்சம் பழ சாறும் சக்தியை வழங்குவதுடன் வாய் நாற்றத்தையும் தடுத்து விடுகின்றன. வாய் துர்நாற்றத்தைப் போக்க எந்த முறையைப் பின்பற்றினாலும் 21  நாட்கள் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும். அப்பொழுதுதான் குடல் சுத்தமாகி வாய் துர்நாற்றம் அடிக்காமல் பாதுகாக்கலாம்.