1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate increases in Chennai

ரூ.36,000-த்தை கடந்த தங்கத்தின் விலை !

தங்கம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.     
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.   
 
இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது.இன்று கிராமுக்கு ரூ.59 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,506க்கும், சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ரெட் லிஸ்ட் பட்டியலில் இந்தியா: விமான சேவை முற்றிலும் ரத்து!