வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (11:13 IST)

அந்தர் பல்டி அடித்த தெற்கு ரயில்வே... லாக்டவுனின் போது ரயில் சேவைகள் ரத்து !

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம் என தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 
தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு ( இரவ்ய் 10 மணி முதல் காலை 4 மணி வரை) அமல்படுத்தப்பட்டது. இதே போல ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் இரவு நேர ஊரடங்கின் போதும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போதும் ரயில்கள் இயங்குமா? என்று பொது மக்கள் மனதில் சந்தேகம் எழுந்தது. இதற்கு தென்னக இரயில்வே முன்னதாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவித்தது. 
 
ஆனால், தற்போது இதனை மாற்றி அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. அதாவது, சென்னை மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது எனவும், முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.