புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (11:07 IST)

தமிழக அரசிடம் ஆலோசிக்கவில்லை; ஆக்ஸிஜன் விவகாரத்தில் மத்திய அரசு மீது அதிருப்தி!

இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தமிழகத்திலிருந்து மத்திய அரசு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் முடிவெடுக்கும் முன்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.