1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate in Chennai increases after 4 days

4 நாட்கள் சரிவுக்கு பின் தலைத்தூக்கிய தங்கத்தின் விலை!

தமிழகம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து சவரன் ரூ.35,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
கடந்த 4 நாட்களாக சரிவை சந்திருந்த தங்கம் விலை இன்று உயர்வை கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,435-க்கும், சவரன் ரூ.35,480க்கும் விற்பனை ஆகிறது.
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது