1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate in Chennai increases

வார தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கத்தின் விலை!

சென்னை
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.36,368க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.4,546க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.72.90க்கு விற்பனை ஆகிறது.
About Writer
Sugapriya Prakash