திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (09:59 IST)

கொரோனா மூன்றாவது அலை மோசமாக இருக்கும்! – மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலை பாதிப்புகள் மோசமாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பது பீதியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மூன்றாவது அலை பரவல் குறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டால் பாதிப்பு மோசமானதாக இருக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே மக்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்படுகின்றன” என கூறியுள்ளார்.