புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (11:58 IST)

நேற்றை போல இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை தொடர்சியாக சில நாட்கள் விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்றை போல இன்றும் குறைந்துள்ளது.  
 
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.   
 
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.280 குறைந்து ரூ.39,040-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.4, 850-க்கு விற்பனை ஆகிறது.