புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (07:15 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைவு: சென்னையில் இன்றைய விலை என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்தே உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் வாகனங்களில் பயன்பாடு குறைந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது
 
இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலைகள் அதிரடியாக குறைந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை வரி அதிகரிப்பின் காரணமாக குறையாமல் இருந்தது மட்டுமின்றி அதிகரித்தும் இருந்தது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ.84.14க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.72க்கு விற்பனை ஆகிறது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது