1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold price hikes to rs .42,592

ஒரே நாளில் ரூ.976 உயர்வு: எதிர்பாரா உயரத்தை தொட்ட தங்க விலை!!

Gold Price
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.   
 
இந்நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.976 உயர்ந்து ரூ.42,592க்கு விற்பனை ஆகிறது. அதேபோல 1 கிராமுக்கு ரூ.122 உயர்ந்து ரூ.5,324க்கு விற்பனை ஆகி வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
பிரபல நடிகருக்கும் அவரது உதவியாளருக்கும் கொரோனா உறுதி !