திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (18:58 IST)

தங்கம் விலை குறைவு…மக்கள் இன்ப அதிர்ச்சி

சென்னையில் இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை குறைந்துள்ளது. இது மக்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் உலகம் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்ததை அடுத்து தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்தது. தொடந்து தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று  சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை பவுனுக்கு ரூ.448 குறைந்தது.

எனவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 க் குறைந்து ரூ.4440க்கு விற்கப்படுகிறது.  பவுனுக்கு ரூ.488 குறைந்து, ரூ.35520க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.70க்கு விற்பனை ஆகிறது. 1கிலோ வெள்ளி ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.