1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (17:37 IST)

ராகுல் காந்தி ராஜினாமா ? தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு

கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
இந்நிலையில் பாராளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக, திகழ 55 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும் ஆனால் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 52 தொகுதிகளில் வென்றது.

இதனால் 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் இப்படி படுதோல்வி அடைந்து இந்த மக்களவைத் தேர்தலீல் சோபிக்காததால் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.
 
இதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இக்கட்டான நிலையில் ராகுல் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். நேற்று காலை நடிகர் ரஜினியும் இதை மொழிந்தார்.
 
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகு ல் காந்தியை நேரில் சந்தித்த டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அவரிடன் ராஜினாமா செய்யவேண்டாமென வலியுறுத்தினார்.
 
பின்னர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்
அதேபோல் சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே . எஸ் அழகிரி தலைமையில் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர்.
 
அப்போது 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
பின்னர், பெட்ரோலை தனது தலையில் ஊற்றிக்கொண்ட தொண்டர்கள் மீது அருகில் இருந்த தொண்டர்கள் தண்ணீரை ஊற்றி அனைத்தனர்.