செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (15:43 IST)

4000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர்

திருவண்ணாமலையில் வெளியே பேன்ஸி ஸ்டோர் நடத்திக்கொண்டு உள்ளே சட்டத்திற்கு புறம்பாக கருகலைப்பு செய்து கொண்டிருந்த தம்பதியினரை போலீஸார் கைது செய்தனர்.

சமீப காலமாக திருவண்ணாமலையில் கருகலைப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து கொண்டுள்ளன. அண்மையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சிகிச்சைக்கு வந்து கொண்டிருந்த பெண் சில மாதங்களாக வரவில்லை. எதனால் என விசாரிக்க சென்றபோது அவர் கருகலைப்பு செய்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. யார் அவருக்கு கருகலைப்பு செய்து கொடுத்தது என்று விசாரிக்கையில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி கொண்டிருக்கும் கவிதா என்பவர்தான் இதை செய்தார் என தெரிந்துள்ளது.

அவரது கடைக்கு விசாரணைக்கு சென்றபோது கவிதா முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியிருக்கிறார். அந்த கடைக்கு வந்திருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரித்தபோது தான் கருக்கலைப்பிற்காக வந்ததாக சொல்லியுள்ளார். இதை தொடர்ந்து கடையின் உள்ளே கருகலைப்பு மருந்துகள், உபகரணங்கள் ஆகியவை இருப்பதை கண்டறிந்து அவற்றை போலீஸ் பறிமுதல் செய்து, கவிதாவையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவர் கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கவிதா பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், வயிற்றில் என்ன குழந்தை இருக்கிறது என்ற ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடுத்தல், கருக்கலைப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 10 வருடமாக இதை செய்து கொண்டிருக்கும் இவர்கள் இதுவரை சுமார் 4000ற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகளை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.