புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (09:18 IST)

திருத்தணியில் வெடித்து சிதறிய பாறை: பொதுமக்கள் செல்ல தடை

திருத்தணியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 104 டிகிரியில் இருந்து 114 டிகிரி வரை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று திருத்தணிக்கு செல்லும் மலைப்பாதை ஒன்றில் இருந்த பாறை திடீரென வெடித்து சிதறியது. அதன் கற்கள் பறந்து சென்று பல பகுதிகளிலும் விழுந்தன. உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர், வெயிலின் தாக்கத்தால் பாறை வெடித்திருக்கிறது. இதுபோல மேலும் சில பாறைகள் வெடிக்கலாம் என்பதால் அந்த வழியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.