வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 மே 2022 (23:53 IST)

இலங்கை ரூபாயில் கடனுதவி வழங்க இணக்கம் தெரிவித்த இந்தியா

srilanka
இலங்கைக்கு மருந்து கொள்வனவிற்காக வழங்கப்பட்ட கடனுதவியை இலங்கை ரூபாயில் செலுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை அடுத்து, இந்த கடனுதவியை இலங்கை ரூபாவில் செலுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கான குறுங்கால மற்றும் மத்திய கால தீர்வுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (மே 25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
 
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படும் டாலர் தட்டுப்பாடு காரணமாக, அந்த தொகையை இலங்கை ரூபாவில் செலுத்த இந்தியாவுடனான கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.