ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (08:30 IST)

ஸ்டாலின், கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சாட்டை முருகன் மீண்டும் கைது!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து குறித்தும் கேரள முதல்வர் பினரயி விஜயன் குறித்தும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் உருவ கேலி செய்ததாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அக்டோபர் 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன