புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 அக்டோபர் 2021 (07:00 IST)

சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலையா?

சென்னை அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலையா?
சென்னை அண்ணாசாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை அண்ணா சாலையில் கடந்த சில நாட்களாக சிலை வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் அருகே நடைபெற்று வரும் இந்த பணி முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது 
 
சென்னை அண்ணாசாலையில் பெரியார், எம்ஜிஆர் உள்பட பல தலைவர்கள் சிலைகள் இருந்தும் கலைஞர் கருணாநிதி சிலை இல்லை என்ற ஏக்கம் திமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த நிலையில் அதனை போக்கும் வகையில் ஸ்பென்சர் அருகே கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க தற்போதைய திமுக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.