செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 7 ஜனவரி 2024 (10:39 IST)

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: முக்கிய அம்சங்கள் என்ன..?

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சற்றுமுன் தொடங்கியுள்ள நிலையில் இதன் முக்கியா அம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
1. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றுள்ளன.
 
2. இந்த மாநாட்டில்  50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
 
3. சென்னை கிண்டியில் இந்து நந்தம்பாக்கம் வரையில் 30 மீட்டர் இடைவெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் சுமார் 10,00க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
4. தொழில் பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்களை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
5. வர்த்தக மையத்தில் ஆங்காங்கே எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பப்பு செய்யப்படுகிறது. 
 
6. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும், சென்னையை பற்றிய குறிப்பு, சென்னையின் முக்கிய இடங்கள், உணவுகள் தொடர்பான புத்தகம் மற்றும் திருவள்ளுவர், ஜல்லிக்கட்டு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் இலச்சினை கொண்ட நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது.
 
Edited by Mahendran