வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 ஜனவரி 2024 (07:47 IST)

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை: 19 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மழைக்காலம் கிட்டத்தட்ட முடிவடைய இருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் சட்டமும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.


 
மேலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மற்ற பள்ளி

Edited by Siva