விஜய் வருகையால் அனைத்து கட்சிக்கும் பாதிப்பு.. ஜிகே வாசன் தெரிவித்த கருத்தால் பரபரப்பு..!
விஜய் அரசியல் வருகையால் அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது, "விஜய் அரசியல் கட்சியால் அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பு ஏற்படும்," என்றும், "விஜய் ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் இருப்பதால், அவர்கள் அந்தந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களிப்பார்கள்," என ஜிகே வாசன் கூறினார்.
அதற்கு மட்டும் இன்றி, விஜய்க்கு இளைய தலைமுறை வாக்காளர்கள், குறிப்பாக முதல் முறை வாக்கு போடுபவர்கள், வாக்களிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதனால் மற்ற நடிகர்கள் தொடங்கிய கட்சிக்கும் விஜய் ஆரம்பித்த கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
திமுகவுக்கு மாற்றான ஒரு வலுவான எதிர்க்கட்சியை தற்போது இல்லை என்ற நிலையில், விஜய் கட்சி வருகை ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், ஒரு வலுவான எதிர்க்கட்சியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டு, எதிர்க்கட்சியாக விஜய் கட்சி மாறினால், 2031 ஆம் ஆண்டு விஜய் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஜிகே வாசன் கூறியதுபோல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விஜய் அரசியல் வருகை பாதிப்பு ஏற்படுத்தும் என்பது உண்மைதான் என்று கூறப்படுகிறது.
Edited by Siva